×

சின்னாளபட்டி சிறுமலை அடிவார பகுதியில் நாட்டு திராட்சை நல்ல விளைச்சல்: விலையும் அதிகம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை: சின்னாளபட்டி சிறுமலை அடிவார பகுதியில் பயிரிடப்பட்ட நாட்டு பன்னீர் திராட்சை நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராகவுள்ளது. விலையும் அதிகம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சின்னாளபட்டியை அடுத்த சிறுமலை அடிவார பகுதிகளான வெள்ளோடு, செட்டியபட்டி, பெருமாள்கோவில்பட்டி, முருகன்பட்டி, பூசாரிபட்டி, ஜாதிகவுண்டன் பட்டி ஆகிய கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நாட்டு பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு இப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக விவசாயிகள் வழக்கத்தை விட கூடுதல் பரப்பில் நாட்டு பன்னீர் திராட்சை சாகுபடி செய்துள்ளனர். சுமார் 120 நாட்களில் மகசூல் தரக்கூடிய நாட்டு பன்னீர் திராட்சைக்கு இப்பகுதி மண் தன்மை மற்றும் விவசாயிகளின் பராமரிப்பு காரணமாக தனித்துவமான சுவை உண்டு. தற்போது இப்பகுதி தோட்டங்களில் நாட்டு பன்னீர் திராட்சை நன்கு கொத்து, கொத்தாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி அந்தோணிசாமி கூறுகையில், ‘இந்த ஆண்டு பெய்த கூடுதல் மழை, பனிப்பொழிவை போன்றே சில நாட்களாக அதிகரித்துள்ள வெயிலின் காரணமாக இப்பகுதியில் நாட்டு பன்னீர் திராட்சை நன்கு விளைந்துள்ளது. இதனால் வழக்கத்தைவிட கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.45 வரை அதிகமாக கொடுத்து உள்ளூர், வெளியூர் வியாபாரிகளே போட்டி, போட்டு அறுவடை செய்து கொள்கின்றனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்னும் சில தினங்களுக்கு பலத்த காற்றோ, கோடைமழையோ பெய்யாமல் இருந்தால் மேலும் விலை உயர்ந்து கடந்த ஆண்டுகளை விட அதிக லாபம் கிடைக்கும்’ என்றார்.நிலக்கோட்டை: சின்னாளபட்டி சிறுமலை அடிவார பகுதியில் பயிரிடப்பட்ட நாட்டு பன்னீர் திராட்சை நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராகவுள்ளது. விலையும் அதிகம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சின்னாளபட்டியை அடுத்த சிறுமலை அடிவார பகுதிகளான வெள்ளோடு, செட்டியபட்டி, பெருமாள்கோவில்பட்டி, முருகன்பட்டி, பூசாரிபட்டி, ஜாதிகவுண்டன் பட்டி ஆகிய கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நாட்டு பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு இப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக விவசாயிகள் வழக்கத்தை விட கூடுதல் பரப்பில் நாட்டு பன்னீர் திராட்சை சாகுபடி செய்துள்ளனர். சுமார் 120 நாட்களில் மகசூல் தரக்கூடிய நாட்டு பன்னீர் திராட்சைக்கு இப்பகுதி மண் தன்மை மற்றும் விவசாயிகளின் பராமரிப்பு காரணமாக தனித்துவமான சுவை உண்டு. தற்போது இப்பகுதி தோட்டங்களில் நாட்டு பன்னீர் திராட்சை நன்கு கொத்து, கொத்தாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி அந்தோணிசாமி கூறுகையில், ‘இந்த ஆண்டு பெய்த கூடுதல் மழை, பனிப்பொழிவை போன்றே சில நாட்களாக அதிகரித்துள்ள வெயிலின் காரணமாக இப்பகுதியில் நாட்டு பன்னீர் திராட்சை நன்கு விளைந்துள்ளது. இதனால் வழக்கத்தைவிட கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.45 வரை அதிகமாக கொடுத்து உள்ளூர், வெளியூர் வியாபாரிகளே போட்டி, போட்டு அறுவடை செய்து கொள்கின்றனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்னும் சில தினங்களுக்கு பலத்த காற்றோ, கோடைமழையோ பெய்யாமல் இருந்தால் மேலும் விலை உயர்ந்து கடந்த ஆண்டுகளை விட அதிக லாபம் கிடைக்கும்’ என்றார்.

Tags : Chinnanapatti , Good yield of native grapes in Chinnalapatti Sirumalai foothills: Farmers are happy as prices are high
× RELATED சின்னாளபட்டி அருகே அறுவடைக்கு தயாரான சின்ன வெங்காயம்